திருவண்ணாமலை கிரிவல பாதைக்கு வந்தடைந்த பிரம்மாண்ட மகா விஷ்ணு சிலை

Jan 09, 2019 08:34 AM 403

திருவண்ணாமலை கிரிவல பாதைக்கு வந்தடைந்த பிரமாண்ட மகாவிஷ்ணு சிலையை ஏராளமான பொதுமக்கள் தரிசித்தனர். பெங்களூரு அருகேயுள்ள கோதண்டராமசாமி ஆலயத்துக்கு எடுத்துச்செல்லப்படும் பிரம்மாண்ட மகாவிஷ்ணு சிலை, செங்கம்- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை வழியாக திருவண்ணாமலை கிரிவல பாதைக்கு வந்தடைந்தது.

அருகே உள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் சிலையை பார்த்துவிட்டு சென்றனர். இதன் காரணமாக அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சிலையை பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லும் பணி இன்று காலை தொடங்கியது. மாலைக்குள் செங்கம் நகருக்குள் சிலை கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comment

Successfully posted