மதுரையில் வீட்டின் ஜன்னலை உடைத்து 28 சவரன் நகை கொள்ளை

Aug 18, 2019 05:19 PM 133

மதுரை பழங்காநத்தத்தில் வீட்டின் ஜன்னலை உடைத்து 28 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

பழங்காநத்தம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த மதியழகன் என்பவர், கடந்த 13 ஆம் தேதி குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றிருந்த நிலையில், வீட்டின் பின் பக்க அறையின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த சுமார் 28 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 21 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். தகவலறிந்து வந்த சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் கொள்ளை சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Comment

Successfully posted