பிரெக்ஸிட் ஒப்பந்தம் கையெழுத்தானது: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

Oct 17, 2019 06:14 PM 234

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற மிகச்சிறந்த புதிய ஒப்பந்தம் எட்டப்பட்டது என்றும், வரும் சனிக்கிழமை பாராளுமன்றத்தில் இது தொடர்பான மசோதா நிறைவேற்றலாம் என்றும் தெரிவித்துள்ளார். பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக நீண்ட காலமாக முயற்சி நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றும் முயற்சி தோல்வியடைந்ததால் முந்தைய பிரதமர் தெரேசா மே தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத் தக்கது.

Comment

Successfully posted