லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய செவிலியர் தூக்கிட்டுத் தற்கொலை

Dec 01, 2019 05:40 PM 1320

லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கியதால், வேலை பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில், அரசு மருத்துவமனை செவிலியர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தவர்களிடம் லஞ்சம் பெற்றதாக 3 செவிலியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய பேச்சியம்மன் படித்துறையைச் சேர்ந்த கார்த்திகா என்ற பெண், வேலை பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில், வீட்டில் தனியாக இருந்த போது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted