புரெவி புயல் முன்னெச்சரிக்கை - 6 விமானங்கள் ரத்து!

Dec 03, 2020 08:29 AM 702

புரெவி புயலை முன்னிட்டு சென்னையிலிருந்து தென் தமிழகத்திற்கு செல்லும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் விமானம் மற்றும் சென்னையிலிருந்து கொச்சி சென்று திரும்பும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தினந்தோறும் சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் 3 விமானங்களில் 2 விமானங்கள் வழக்கம் போல இயக்கப்பட்டு வந்த நிலையில், புரெவி புயலால் மதியம் செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டது. அதேபோல, சென்னையிலிருந்து கொச்சி செல்லும் விமானங்களும், சென்னையிலிருந்து திருச்சி செல்லக்கூடிய 2 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

Comment

Successfully posted