திருத்துறைப்பூண்டி அருகே பேருந்துகள் நேருக்குநேர் மோதி விபத்து : 40 பேர் காயம்

Jan 26, 2019 08:47 AM 370

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே, இரண்டு பேருந்துகள் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் 40 பேர் காயமடைந்தனர். வேதாரண்யத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. தேவர்பண்ணை என்ற இடத்தில் வந்தபோது, எதிரே வந்த மற்றொரு பேருந்தும் இதுவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், நான்கு பெண்கள் உள்பட 40 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து பற்றி, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted