சென்னையில் போக்குவரத்து மாற்றம்

Oct 12, 2021 10:45 AM 9297

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு வரும் நாளை மற்றும் நாளை மறுநாள், சென்னையில் 3 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இதன் காரணமாக, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி கோயம்பேட்டில் இருந்து செல்லும் அரசு பேருந்துகளை 100 அடி சாலையில் செல்லாமல், பூந்தமல்லி உயர்சாலை, மதுரவாயல் வழியாக தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் வழியாக இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் கோயம்பேட்டில் இருந்து செல்லும் ஆம்னி பேருந்துகள், மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக பெருங்களத்தூர் செல்ல வேண்டும்.

கிழக்கு கடற்கரை சாலை நோக்கி செல்லும் ஆம்னி பேருந்துகள், கத்திப்பாரா பாலம் வழியாக அனுமதிக்கப்படும்.

ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு, தாம்பரம் அல்லது வண்டலூரை தவிர்த்து மற்ற இடங்களில் பயணிகளை ஏற்றுவதை தவிர்க்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கும்படி சென்னை போக்குவரத்து காவல்துறை கேட்டு கொண்டுள்ளது.

Comment

Successfully posted