சாலையோரம் மின்கம்பங்களுக்கு இடையூறாக நின்ற மரங்கள் வேருடன் இடமாற்றம்

May 16, 2019 12:22 PM 33

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே மின் கம்பங்களுக்கு இடையூறாக சாலையோரம் நின்ற மரங்கள், வேருடன் அப்புறப்படுத்தி நடப்பட்டது.

மொடச்சூர் சாலையோரம், குடியிருப்பு பகுதிகள் நிறைந்த இடத்தில் 4 புளிய மரங்கள் நின்றிருந்தன. அந்த மரங்கள் அருகில் மின் கம்பங்கள் உள்ள நிலையில், மழை காலத்தில் மின்சாரம் தாக்கும் அபாயம் இருந்தது. இது குறித்து ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அந்த மரங்களை வேருடன் பிடுங்கி மாற்று இடத்தில் நட்டனர். மரத்தின் பயன் அறிந்து அதை வெட்டி வீணாக்காமல் மாற்று யோசனை மேற்கொண்டது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

Comment

Successfully posted