டிடிவி தினகரனின் செயல்பாட்டினால் அமமுகவில் உச்சக்கட்ட குழப்பம்

Jun 25, 2019 02:49 PM 608

டிடிவி தினகரனின் தன்னிச்சையான செயல்பாட்டினால், நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளதால் அமமுக-வில் உச்சக்கட்ட குழப்பம் நிலவி வருகிறது.

அமமுக ஆரம்பிக்கப்பட்டது முதலே அங்கு தொடர் குழப்பம் நிலவி வருகிறது. குறிப்பாக அமமுக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் டிடிவி தினகரன் அவமதித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த முக்கிய நிர்வாகிகள், அமமுகவை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனிடையே டிடிவி தினகரனின் செயல்பாடுகள் குறித்து, தங்க தமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ நேற்றைய தினம் வெளியாகியுள்ளது. இதன் மூலம் டிடிவி தினகரனின் செயல்பாடுகள் வெட்ட வெளிச்சமாகியுள்ளன. தொடர் தோல்விகள், நிர்வாகிகள் வெளியேறுவது போன்ற காரணங்களால் விரக்தி அடைந்திருக்கும் டிடிவி தினகரன், சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதில் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொள்ளவில்லை. டிடிவி தினகரன் மீதான அதிருப்தியால் அமமுகவில் பிளவு தொடரும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Comment

Successfully posted