2025ம் ஆண்டிற்குள் நாட்டில் புதிய 30 லட்சம் வேலை வாய்ப்புகள்: அமைச்சர் ராஜ்நாத சிங்

Nov 23, 2019 06:29 AM 395

வரும் 2025ம் ஆண்டிற்குள் பாதுகாப்பு துறையில் 30 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத சிங் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு உற்பத்தி கொள்கையின் கீழ் விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறையில் 26 பில்லியன் டாலர் முதலீடு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், அதில் சுமார் 10 பில்லியன் டாலர் மதிப்பில் வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் நடைபெற்ற அரசு விழாவில் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றிய அவர், வரும் 2025ம் ஆண்டிற்குள் பாதுகாப்பு துறையில் சுமார் 30 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் நாட்டில் புதுமை மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

Comment

Successfully posted