திருநாவுக்கரசு இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் சோதனை

Mar 14, 2019 07:05 PM 140

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசுவின் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர்.

பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஆபாச படம் எடுத்ததாகவும் அதனை வைத்து மிரட்டி பணம் பறித்து வந்ததாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக திருநாவுக்கரசு உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி மைக்கனாம்பட்டியில் உள்ள திருநாவுக்கரசின் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

எஸ்.பி. நிஷா பார்த்திபன் தலைமையில் நடைபெற்று வரும் இச்சோதனையில் திருநாவுக்கரசு இல்லத்தில் உள்ள கணினி, அவரது உறவினர்களின் செல்போன்கள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. குற்றம் சாட்டப்பட்டுள்ள நால்வரின் வீடுகளிலும் சிபிசிஐடி போலீசார் அடுத்தடுத்து ஆய்வு நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

Comment

Successfully posted