சாத்தான்குளம் விவகாரம் தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

Jun 30, 2020 06:51 AM 422

சத்தான்குளத்தில் தந்தை - மகன் உயிரிழந்தது தொடர்பாக, வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழத்தாக கூறப்படும் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரது மரணம் குறித்து மாவட்ட உரிமையியல் நீதிபதி பாரதிதாசன் விசாரணை மேற்கொண்டு வந்தார். சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணை சிபிஐ மாற்றப்படும் என்றும், குற்றம் செய்தவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருப்பதை அரசாணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில், வழக்கின் தன்மை உணர்ந்து சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Comment

Successfully posted