சி.பி.எஸ்.சி 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டன.

Dec 24, 2018 08:27 AM 191

சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதிகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் எனப்படும் சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் வரும் பிப்ரவரி மாதம் முதல் தொடங்க உள்ளது.

அதன்படி 10-ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி மாதம் 21-ம் தேதியும், 12-ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி மாதம் 15-ம் தேதியும் தொடங்குகின்றன.

இந்த தேர்விற்கான முழு அட்டவணை பாடவாரியாக cbse.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Comment

Successfully posted