சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான நிலுவை பொதுத்தேர்வுகள், ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

May 09, 2020 10:16 AM 712

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இதேபோல் பல்வேறு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் பாதியில் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், நிலுவை தேர்வுகளுக்கான புதிய தேதியை சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comment

Successfully posted