அ.தி.மு.க.வை அழிக்க நினைப்பவர்களின் எண்ணம் நிறைவேறாது - முதலமைச்சர்

Oct 30, 2018 07:22 AM 664

பொய் மூட்டையால் அ.தி.மு.க. கட்சியையும், ஆட்சியையும் அழித்துவிட நினைப்பவர்களின் எண்ணம் நிறைவேறாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரையில் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவர்,தெய்வீகத்தையும் தேசத்தையும் இரு கண்களாக பாவித்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், அ.தி.மு.க.ஆட்சியையும் கட்சியையும் அழித்து விடலாம் என சிலர் நினைப்பது நிறைவேறாது என்றார். எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் நாள்தோறும் பொய்மூட்டையை அவிழ்த்து விட்டு கொண்டே வருவதாகவும் அவர்கள் எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயார் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Comment

Successfully posted