தமிழக ஆளுநருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

Jun 12, 2019 09:16 PM 73

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

அப்போது, எதிர் வரும் உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற அதிமுக நிர்வாகிகள் அனைவரும் பாடுபட வேண்டும் என்று அக்கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ராஜ்பவனில் உள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இல்லத்திற்கு நேரில் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் உடனிருந்தனர். சுமார் 1 மணிநேரம் நடைபெற்ற இச்சந்திப்பில் முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிகிறது.

Comment

Successfully posted