முதலமைச்சர் முன்னிலையில் இணைந்த திமுகவினர்

Jan 31, 2020 03:00 PM 858

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த திமுகவினர் நூற்றுக்கணக்கானோர்   முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.

சென்னையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில், திமுகவை சேர்ந்த நெல்லை மாவட்ட நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா தலைமையில் முதலமைச்சரை சந்தித்து,அதிமுகவில் இணைந்தனர். முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றுக்கொண்ட அவர்கள், பின்னர் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதிமுக அரசு ஒடுக்கப்பட்ட மக்களின் நலனில் அக்கறை உள்ள அரசாக உள்ளதாகவும், திமுக கொத்தடிமையாக தங்களை நடத்தியதாகவும் தெரிவித்தனர்.

Comment

Successfully posted