மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு முதல்வர் பழனிசாமி அஞ்சலி

Dec 05, 2019 12:25 PM 264

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி, முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார். ஆண்டுதோறும் அவரது நினைவு தினம் அதிமுக சார்பில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

Comment

Successfully posted