தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் ஆர். முத்துக்குமார சுவாமி மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்

Dec 02, 2018 03:28 PM 230

தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் ஆர். முத்துக்குமார சுவாமியின் மறைவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

முத்துக்குமார சுவாமி, உடல்நலக் குறைவால் தனது 70-வது வயதில் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தாக முதலமைச்சர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக அவர் திறம்பட பணியாற்றிய அவருடைய சீரிய பணியினை அங்கீகரிக்கும் வகையில், 2016-ம் ஆண்டில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பதவியில் இருந்த போது, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக அவரை நியமனம் செய்ததாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முத்துக்குமாரசுவாமி தனது திறமையான வாதத்தால் பல வழக்குகளில் வெற்றி கண்டவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். அவரது மறைவு நீதித்துறைக்கு பேரிழப்பாகும் என்றும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும், முதலமைச்சர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted