சுஷ்மா சுவராஜ் மறைவு நாட்டிற்கு பேரிழப்பு: முதல்வர் பழனிசாமி இரங்கல்

Aug 07, 2019 11:29 AM 251

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடல் நலக்குறைவு காரணமாக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறைவு நாட்டிற்கு பேரிழப்பாகும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அமைச்சரவையில் பல்வேறு பொறுப்புகளை வகித்த சுஷ்மா சுவராஜ் கட்சி பேதமின்றி அனைவருடனும் நெருக்கமாக பழகக் கூடியவர் எனக் குறிப்பிட்டுள்ளார். சுஷ்மா ஸ்வராஜை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதலமைச்சர், அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டார்.

Comment

Successfully posted