சிஏஏ போராட்டத்தில் முதியவர் இறந்ததாக வதந்தி: முதல்வர் விளக்கம்

Feb 17, 2020 07:48 PM 545

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. அப்போது, வண்ணாரப்பேட்டையில் காவல்துறையினர் நடத்திய தடியடி குறித்து எதிர்கட்சிகள் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினர். இதற்கு உடனடியாக பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சம்பவம் நடந்த இடத்திலிருந்து ஆறு தெருக்கள் தாண்டி வாழ்ந்து வந்த எழுபது வயது நிரம்பிய பசுருல்லா நோயின் காரணமாக இயற்கையாக மரணமடைந்ததார். ஆனால், அவர் காவல் துறையினரின்  தடியடியில் இறந்ததாக உண்மைக்கு மாறான வதந்தி பரப்பப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், CAA-வுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு காவல்துறையினர் முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Comment

Successfully posted