சமண சமய மக்களுக்கு முதலமைச்சர் மகாவீர் ஜெயந்தி வாழ்த்து

Apr 16, 2019 01:12 PM 166

சமண சமய மக்கள் அனைவருக்கும் உளம் கனிந்த மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சமண சமயத்தின் 24-வது தீர்த்தங்கரராகிய பகவான் மகாவீரர் பிறந்த தினத்தை கொண்டாடி மகிழும், அனைவருக்கும் மகாவீர் ஜெயந்தி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். அகிம்சையே தர்மமாகும், எந்த ஜீவனையும் கொல்லாதே என்பதே பகவான் மகாவீரர் அறிவுறுத்திய சமத்துவக் கொள்கை என்று தெரிவித்துள்ள அவர், மனித வாழ்வு மேன்மையுற, பகவான் மகாவீரர் போதித்த அகிம்சை, சத்தியம், கள்ளாமை, பற்றற்று இருத்தல் போன்ற உயரிய நெறிகளை, கடைப்பிடித்தால் உலகில் அமைதி நிலவும் என்று தெரிவித்துள்ளார்.

மகாவீரரின் உயரிய போதனைகளை அனைவரும் பின்பற்றி அன்பும், அறமும் நிறைந்த மகிழ்வான வாழ்வை வாழ்ந்திட வேண்டும் என்றும், சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை இனிய "மகாவீர் ஜெயந்தி" நல்வாழ்த்துகளை உரித்தாக்குவதாகவும் முதலமைச்சர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted