திமுக ஆட்சிக் காலத்தில் எத்தனை வெள்ளை அறிக்கைகள் வெளியிடப்பட்டன?: முதல்வர்

Sep 11, 2019 10:13 PM 310

திமுக ஆட்சிக் காலத்தில் எத்தனை வெள்ளை அறிக்கைகள் வெளியிடப்பட்டன என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், தமிழகத்தின் நலனில் துளியும் அக்கறை இல்லாதவர் ஸ்டாலின் என்று கூறினார். அரசின் நலத்திட்டங்களை குறை கூறுவதே வழக்கமாக கொண்டுள்ளார் என குற்றம்சாட்டினார். தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தனது வெளிநாட்டு சுற்றுப்பயணம் அமைந்ததாகவும், தனது சுற்றுப்பயணத்தில் வெளிப்படைத் தன்மை இருந்ததாகவும் முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.

மேலும், காவிரி ஆற்றில் உபரி நீர் திறக்கப்படும் இடத்தில் இருந்து கொள்ளிடம் வரை மூன்று தடுப்பணைகள் கட்ட ஆய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய முதலமைச்சர், உபரியாக வெளியேறும் நீரை தடுப்பணை மூலம் தேக்கி நிலத்தடி நீர்மட்டம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

Comment

Successfully posted