மேகதாது திட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது: மத்திய அமைச்சரிடம் முதல்வர் கோரிக்கை

Jun 15, 2019 04:17 PM 270

மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த தமிழக முதலமைச்சர், மேகதாது திட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என கோரிக்கை வைத்தார்.

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை, இன்று கர்நாடக முதல்வர் குமாரசாமி சந்தித்தார். அப்போது மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்கும்படி ஜலசக்தித்துறை அமைச்சரிடம் குமாரசாமி கோரிக்கை வைத்தார். இதையடுத்து, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்தார். அப்போது, மேகதாது திட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என்றும், காவிரியில் கர்நாடகா தண்ணீரை திறந்து விட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

முன்னதாக, பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர், பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். தமிழகத்திற்கான வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கவேண்டிய நிலுவைத் தொகைகளை வழங்கக்கோரும் அறிக்கையை பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Comment

Successfully posted

Super User

நல்லா முதல்வர் ஐயா நன்றி நன்றி