தண்ணீர் தட்டுப்பாடு இல்லா தமிழகம் விரைவில் உருவாகும்: முதலமைச்சர்

Oct 13, 2019 06:46 AM 671

விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர், தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத தமிழகம் விரைவில் உருவாகும் என்று தெரிவித்தார்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க, குடிமராமத்து பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், திமுகவிற்கு வாக்களிப்பதன் மூலம் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்து தமிழகம் இன்னும் 3 ஆண்டுகளில் முழுமையாக விடுபடும் எனவும், அதற்காக குடிமராமத்து பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், மக்கள் எளிதில் சந்திக்கும் தலைவர்களாக தாங்கள் இருப்பதால், அவர்களின் குறைகள் நீக்கப்படுவதாக தெரிவித்தார். விவசாயிகளின் நலன் காக்க நீர் மேலாண்மை அமைப்பை ஏற்படுத்தி செயல்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Comment

Successfully posted