முதலமைச்சர் மீது வழக்கு - அரசியல் உள் நோக்கம் கொண்டது

Oct 18, 2018 09:54 AM 773

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடர்ந்திருப்பது அரசியல் உள்நோக்கம் என உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். 

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் அதிமுக கட்சியின் 47வது ஆண்டு தொடக்க விழா பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் காமராஜ், நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார். 

பின்னர் பேசிய அவர்,  திமுகவில் கணக்கு கேட்டதற்காகவே கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் எம்.ஜி.ஆர் என்றும், அதன் பிறகு உருவானதே அதிமுக கட்சி என்று தெரிவித்தார். மேலும், புரட்சி தலைவர் எம் ஜி ஆர் துவங்கி வைத்த அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு தொடர்ந்தால் மட்டும் அவர் குற்றவாளியாகி விட முடியாது என தெரிவித்த அமைச்சர் காமராஜ், அதனை சட்ட ரீதியாக முதலமைச்சர் எதிர்கொள்வார் என தெரிவித்தார்.Comment

Successfully posted