முதலமைச்சரின் சொந்த தொகுதியான கொளத்தூர் மீண்டும் வெள்ளக்காடானது

Nov 27, 2021 03:02 PM 1384

முதலமைச்சர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூர், மீண்டும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதி, கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, மழை நீரை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்த நிலையில், தற்போது மீண்டும் பெய்த கனமழை காரணமாக, கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட, ஜவஹர்நகர், ஜி.கே.எம். காலனி, பெரியார் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குளம்போல் மழை நீர் தேங்கியுள்ளது.

மேலும், வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்ததால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். குடியிருப்புப் பகுதிகளில் தேங்கிய மழை நீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Comment

Successfully posted