சொன்னதை செய்த முதல்வர்: தேனி சட்டக்கல்லூரி கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்!

Mar 06, 2020 04:27 PM 917

தேனியில் 89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள அரசு சட்டக்கல்லூரியின் கட்டடம் மற்றும் மாணவ, மாணவிகளின் விடுதி கட்டடம் ஆகியவற்றிற்கு முதலமைச்சர் பழனிசாமி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.

பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு குறைந்த செலவில் சட்டக்கல்வியினை வழங்கிட, புதிதாக 3 அரசு சட்டக்கல்லூரிகள் துவங்கப்படுமென கடந்த 2019 ஆண்டு முதலமைச்சர் பழனிசாமி சட்டமன்றத்தில் அறிவித்தார்.

இந்த அறிவிப்பிற்கிணங்க சேலம், நாமக்கல் மற்றும் தேனி ஆகிய மூன்று இடங்களில் சட்டக்கல்லூரி துவங்குதற்கான ஆரம்ப கட்டப்பணிகளை மேற்கொள்வதற்காக தனி அலுவலர்களை நியமித்து அரசாணை வெளியானது.

இதன்படி, தேனியில் 89 கோடி ரூபாய் மதிப்பில் சட்டக்கல்லூரி மற்றும் மாணவ, மாணவியர் விடுதிகளுக்கு நிரந்தர கட்டடம் கட்டும் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் சண்முகம், சட்டத்துறை செயலாளர் கோபி ரவிக்குமார், சட்டக்கல்வி இயக்குநர் முனைவர் சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Comment

Successfully posted