விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் நிதி: முதல்வர்

May 24, 2019 08:58 PM 174

பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பொது நிவாரண நிதியில் இருந்து தலா 1 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷ வாயு தாக்கி மயக்கம் அடைந்த நிலையில், அவரை காப்பாற்ற சென்ற அவரது மகன்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருவள்ளூர் மாவட்டம் மன்னை நகர் வெடிபொருள் உற்பத்தி கூடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 12 பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Comment

Successfully posted