அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு!

Sep 17, 2020 03:42 PM 390

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையிலிருந்து பழைய மற்றும் புதிய பாசன பகுதிகளுக்கு வரும் 20-ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 16 அமராவதி பழைய வாய்க்கால் பாசனப் பகுதி நிலங்களில் குறுவை சாகுபடிக்காக, அமராவதி ஆற்று மதகு வழியாக 6,048 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், திருப்பூர் மாவட்டத்திலுள்ள புதிய பாசனப் பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக அமராவதி பிரதானக் கால்வாய் வழியாக 2,661 மில்லியன் கன அடி நீரையும் திறக்குமாறு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

வரும் 20ம் தேதியிலிருந்து அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி வரை அமராவதி அணையிலிருந்து திறக்கப்படும் நீரினால், 51,803 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறவுள்ளன. விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூல் பெறவேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Comment

Successfully posted