டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் மோசடி செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்: முதல்வர்

Feb 17, 2020 05:49 PM 496

டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்தது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. கூட்டத்தின் போது டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு தொடர்பாக எதிர்கட்சிகள் சார்பில் கேள்விகள் எழுப்பப்பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. மேலும், அண்மையில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில், 2 மையங்களில் முறைகேடு நடந்தது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் விளக்கம் அளித்தார்.

Comment

Successfully posted