18 வயது மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று முதல் தொடக்கம்

May 01, 2021 08:04 AM 586

நாடு முழுவதும் 18 வயது மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று முதல் தொடங்குகிறது.

நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. நாள்தோறும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டது.

முதலில் முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வந்த நிலையில், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்த நிலையில், நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் 18 வயது மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று முதல் தொடங்குகிறது.

தடுப்பூசி செலுத்துவதற்கான முன்பதிவும் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, பல்வேறு மாநிலங்களில் திட்டமிட்டபடி தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்க வாய்ப்பு இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், தடுப்பூசி கிடைக்கும் வரை 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே செலுத்தப்படும் என அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

Comment

Successfully posted