கம்யூ. மாநில செயலாளரின் பேச்சை கேட்டு ஓட்டமெடுத்த பொதுமக்கள்

Apr 15, 2019 12:11 PM 78

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திமுக நாடாளுமன்ற வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், காலியான நாற்காலிகளை பார்த்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது கேலிக்குள்ளானது.

பழனியில் நடைபெற்ற கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். பொதுக்கூட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏராளமானவர்களை அழைத்து வந்திருந்தனர். ஆனால் பாலகிருஷ்ணன் பேச ஆரம்பிக்கும்போது நாற்காலிகள் அனைத்தும் காலியாகின.

இருப்பினும் தனது பிரசாரத்தில் மனம் தளராத பாலகிருஷ்ணன், காலியான நாற்காலிகளை பார்த்து கம்பீரமாக தன்னுடைய வாக்கு சேகரிப்பை தொடர்ந்தார். பாலகிருஷ்ணனின் இந்த செயல், அங்கிருந்தோரின் கேலிக்கு உள்ளாகியது.

Comment

Successfully posted