சிஏஏ தொடர்பாக ஆலோசனை நடத்த இஸ்லாமிய தலைவர்களுக்கு அழைப்பு: தலைமை செயலாளர்

Mar 13, 2020 01:47 PM 348

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இஸ்லாமிய தலைவர்களுக்கு தலைமை செயலாளர் சண்முகம் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான சந்தேகங்களை போக்கும் வகையில் தலைமைச் செயலகத்தில் நாளை மாலை 4 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் இஸ்லாமிய சமுதாய தலைவர்கள் தவறாமல் கலந்துக் கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என தலைமை செயலாளர் சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Comment

Successfully posted