ஊழல்வாதிகளான காங்கிரஸ் தமிழகத்திற்கு நல்லது செய்யமுடியுமா?

Feb 22, 2019 05:04 PM 331

தமிழகத்தில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உறுதிபடத் தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் பாஜக சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதாக கூறினார்.

ஊழல்வாதிகளான திமுக - காங்கிரஸ் கூட்டணி தமிழகத்திற்கு நல்லது செய்யமுடியுமா என்று கேள்வி எழுப்பிய அமித் ஷா, நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று தெரிவித்தார். சிறந்த தலைவர்களை கொடுத்த பூமி தமிழகம் என்று குறிப்பிட்ட அவர், நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவது நாட்டிற்கு மிக அவசியம் எனவும் கூறினார்.

Comment

Successfully posted