வேட்பாளர் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி தீவிரம்!

Mar 30, 2021 07:40 AM 553

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்களை வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணி தமிழ்நாடு முழுவதும் துவங்கியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சிகளின் சின்னங்கள்,நோட்டோவுக்கு குறியீடு என 16 சின்னங்களை வாக்குப்பதிவு இயந்திரத்தில் பெல் நிறுவன பொறியாளர்கள் பதிவேற்றம் செய்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர், வேட்பாளர்கள் முன்னிலையில் 501 எதிரங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

இதேபோல், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் மற்றும் சின்னங்களை வாக்குபதிவு எந்திரத்தில் பொருத்தப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில், வாக்கு பதிவு எந்திரத்தில் வாக்காளர் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணியை, மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலரான தினேஷ் பொன்ராஜ் ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில், 398 வாக்குச் சாவடி மையங்களுக்காக வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அதிகாரி பொன்னையா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Comment

Successfully posted