மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

Mar 15, 2019 05:51 PM 113

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடும் 2 தொகுதிகளின் வேட்பாளர்களை அந்தக் கட்சி அறிவித்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் கோவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசி0ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கோவை தொகுதியில் பி.ஆர்.நடராஜன் மற்றும் மதுரையில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவித்தார்.

Comment

Successfully posted