இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு

Mar 15, 2019 07:53 PM 134

2 தொகுதிகளில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதன்படி நாகப்பட்டினம் மற்றும் திருப்பூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில், அந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் தொகுதியில் செல்வராஜும், திருப்பூர் தொகுதியில் சுப்பராயனும் போட்டியிடுவார்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

Comment

Successfully posted