டோக்கியோவில் புத்தாண்டு தினத்தை கொண்டாடிய மக்கள் கூட்டத்தில் கார் மோதல்: 9 பேர் பலி

Jan 01, 2019 01:22 PM 420

டோக்கியோவில் புத்தாண்டு கொண்டாட்டிய மக்கள் மீது இளைஞர் ஒருவர் கண்மூடித்தடிமாக காரை மோதிய சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் முக்கிய கடை வீதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டி இருந்தது. அப்போது 21 வயது மதிக்கத்தக்க கசுகிரோ என்ற இளைஞர் மது போதையில் காரை வேகமாக ஓட்டி உள்ளார். திடீரென காரை புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்த பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக மோதினார். இதில் சம்பவ இடத்திலேயே பொதுமக்கள் 9 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் டோக்கியோவில் சிறப்பாக கொண்டாடப்படும் புத்தாண்டு கொண்டாட்டம் இந்த விபத்தினால் கலையிழந்து காணப்பட்டது. புத்தாண்டின் போது வானவேடிக்கை மற்றும் மக்கள் கூட்டம் இல்லாத டோக்கியோவை முதல் முறையாக பார்ப்பதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.

Comment

Successfully posted