மதுரையில் கார் ஓட்டுநர் வெட்டிக்கொலை

Feb 12, 2019 10:55 AM 123

மதுரையில் வாய்த் தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கொடிக்குளம் பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநரான சிவா புதூர் பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு சிலருடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், சிவாவை கொடூரமாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், சிவாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related items

Comment

Successfully posted