சரக்கு வாகனத்தில் சுரங்கம் அமைத்து சந்தனக்கட்டைகள் கடத்தல்

Mar 15, 2019 11:57 AM 337

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சரக்கு வாகனத்தின் அடிப்பகுதியில் நூதன முறையில் சுரங்கம் அமைத்து சந்தனக் கட்டைகளை கடத்திய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடியிலிருந்து கேரளாவிற்கு சந்தனக்கட்டைகள் கடத்தப்படுவதாக மாவட்ட வன அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் வாழப்பாடி வனவர்கள் சிவக்குமார், குமரவேல் உள்ளிட்டவர்கள் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.அப்போது அந்தப் பகுதியாக வந்த சரக்கு வாகனம் ஒன்றை சோதனையிட்டதில், அந்த வாகனத்தின் அடிப்பகுதியில் சுரங்கம் அமைத்து சந்தனக் கட்டைகள் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் வாகனத்தில் இருந்த இருவரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர். இதையடுத்து சரக்கு வாகனம் மற்றும் அதிலிருந்த 1.6 லட்சம் ரூபாய் மதிப்பிலான 80 கிலோ சந்தனக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Comment

Successfully posted