வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக சீமான், திருமுருகன் காந்தி மீது வழக்குப்பதிவு

Feb 13, 2020 12:20 PM 481

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி கிண்டியில் நடைபெற்ற காமராஜர் நினைவு நாள் விழாவிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், அரசுக்கு எதிராகவும் ,வன்முறையை தூண்டும் விதமாகவும்  பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோட்டூர்புரம் காவல் ஆய்வாளர் அஜூகுமார் அளித்த புகாரின் பேரில் ஐபிசி 153, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் நடைபெற்ற கூட்டத்தில் சாதி மோதலை ஏற்படுத்தும் விதமாகவும், வேத இதிகாசங்களை பற்றி இழிவாக பேசியதாகவும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Comment

Successfully posted