கருப்பர்கூட்டம் யூடியூப் சேனலைச்சேர்ந்த வேலு பிரபாகரன் மீது வழக்குப்பதிவு!

Jul 31, 2020 03:52 PM 490

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த திரைப்பட இயக்குநர் வேலுபிரபாகரன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாணை நடைபெற்று வருகிறது.

கந்தசஷ்டி கவசத்தை பற்றி இழிவாக பேசி வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த செந்தில்வாசன், சுரேந்திரன் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த சேனலை சேர்ந்த திரைப்பட இயக்குநர் வேலுபிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சமூக வலைத்தளம் மற்றும் ஸ்கைப் மூலமாக பல்வேறு நாடுகளில் உள்ள நபர்களுக்கு இந்து மதத்தைப் பற்றியும், கந்தசஷ்டி கவசம் பற்றி எதிரான கருத்துக்களை பரப்புவது குறித்து பேசியது அம்பலமாகியுள்ளது.

Comment

Successfully posted