நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள் : இன்று தீர்ப்பு

Jan 24, 2020 06:54 AM 312

நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஜூன் 23ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், தேர்தலை நிறுத்தி வைத்து மாவட்ட பதிவாளர் ஜூன் 19-ம் தேதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதேபோல், தபால் வாக்குகளை செலுத்த அனுமதிக்கவில்லை என்பதால், நடிகர் சங்கத்திற்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்யக் கோரி உறுப்பினர் ஏழுமலை உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதனிடையே, நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தைக் கவனிக்க பதிவுத் துறை உதவி ஐஜி கீதாவை நியமித்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த அனைத்து வழக்குகளையும் விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்த நிலையில், அனைத்து வழக்குகளிலும் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

Comment

Successfully posted