காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு பிப்ரவரி 21ல் அடிக்கல்!

Feb 19, 2021 06:58 AM 3342

காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டப் பணியை வரும் 21ஆம் தேதி புதுக்கோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கையை ஏற்று 14 ஆயிரம் கோடி ரூபாயில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார். முதற்கட்டமாக 700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் வரும் 21ஆம் தேதி இதற்கான பணியினை புதுக்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். 259 கிலோமீட்டர் நீளத்துக்கு கால்வாய் வெட்டப்பட்டு,11ஆறுகள் இணைக்கப்படும் காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தினால் திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயனடைவார்கள்.

 

Comment

Successfully posted