காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்துக்கு நிரந்தரமான தலைவர் தேவை -புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி

Dec 11, 2018 07:56 AM 515

காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்துக்கு நிரந்தரமான தலைவர் தேவை என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

பட்டியலின குழுவிலுள்ள பள்ளர், குடும்பர் உள்ளிட்ட 76 பெயர்களில் அழைக்கப்படும் பட்டப் பெயர்களை தேவேந்திரகுல வேளாளர் என்று அரசாணை வழங்க வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தஞ்சை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்த நேரத்தில் தேர்தல் வந்தால் அதை சந்திக்க தாயாராக உள்ளதாகவும், தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Comment

Successfully posted