கொடைக்கானலின் 174-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

May 26, 2019 06:38 PM 139

கொடைக்கானலின் 174-வது பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

எழில்மிகு சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு இன்று 174-வது பிறந்தநாள் ஆகும். இதனை முன்னிட்டு அங்கு குவிந்துள்ள சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு நகராட்சி ஆணையாளர் இனிப்புகளை வழங்கினார். முன்னதாக கொடைக்கானல் நகராட்சி அருகே உள்ள சிறுவர் பூங்காவில் காந்தியடிகளின் உருவச் சிலைக்கு நகராட்சி ஆணையர் முருகேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கொடைக்கானல் மலைப் பிரதேசத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள ஒத்துழைப்பு நல்குமாறு நகராட்சி ஆணையர் கேட்டுக் கொண்டார்.

Comment

Successfully posted