செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் கைது

Jan 31, 2020 04:20 PM 314

சென்னை திருவொற்றியூரில் சாலையில் நடந்த சென்ற தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே செல்போனில் பேசிய படி நடந்து  சென்று கொண்டிருந்த முரளிதரன் என்பவரின் செல்போனை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பறித்து சென்றனர். இதையடுத்து, பேசின் ரோடு அருகே செல்போனில் சிம் கார்ட்டை மாற்றிகொண்டிருந்த இருவர் காவல்துறையினரை கண்டதும் தப்பியோட முயன்றனர். அவர்களை விரட்டி பிடித்து விசாரித்ததில் முரளிதரனின் செல்போன் உள்ளிட்ட 5 க்கும் அதிகமான செல்போன்களை திருடியது தெரியவந்தது. இது தொடர்பாக, பழைய வண்ணாரபேட்டையை சேர்ந்த மணிகண்டன், கொடுங்கையூரை சேர்ந்த சின்னதுரை ஆகியோரை கைது செய்த காவல்துறையினர், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Comment

Successfully posted