செல்போன் திருடிய 2 வாலிபர்கள் கைது !

Oct 16, 2018 10:34 AM 524

தனியார் உணவகத்தில் செல்போன் திருடிய 2 வாலிபர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து செல்போன்கள் பறிமுதல் செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரத்தை அடுத்த படப்பையில் தனியார் உணவகம் ஒன்றில் கோபால் ரெட்டி என்பவர் சாப்பிட்டு விட்டு செல்போனை மேஜையில் வைத்து விட்டு கைகழுவ சென்றிருந்தார்.

திரும்பி வந்து பார்த்தபோது மேஜையில் வைத்திருந்த செல்போன் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உணவகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவை ஆய்வு செய்த போது, இருவர் செல்போனை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றது பதிவாகி இருந்தது.

அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பேருந்து நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த இரண்டு பேரிடம் விசாரணை நடத்தியதில், செல்போன் திருடியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடம் இருந்து 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Comment

Successfully posted