அகழாய்வு தகவல்களை மறைக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு கிடையாது - அமைச்சர் பாண்டியராஜன்

Oct 14, 2018 12:32 PM 597

அகழாய்வு தகவல்களை மறைக்க வேண்டும் என்ற எண்ணம் மத்திய, மாநில அரசுகளுக்கு கிடையாது என தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் உள்ள கீழடியில், தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இவற்றை பார்வையிட்ட அவர், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

கீழடி அகழாய்வு மூலம் இதுவரை 7,818 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இவற்றை காட்சிப்படுத்த ரூ.2 கோடி மதிப்பில் அருங்காட்சியகம் அமைக்கப்பட இருப்பதாக அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

ஜனவரி மாதம் கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Comment

Successfully posted